அமரர் சுகண்யா சிவஞானம் – 3ம் ஆண்டு நினைவஞ்சலி – Notice

அமரர் சுகண்யா சிவஞானம் – 3ம் ஆண்டு நினைவஞ்சலி

Spread the love

புத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kingston ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுகண்யா சிவஞானம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீயே எமையாள் சுகண்யா!!!

கண் வைத்தானோ – அந்த
இரக்கமற்ற கொடிய காலனவன்
விளையாடி ஆசை காட்டி – நீ
மறைந்து சென்ற மாயம் என்ன?

இறப்பு என்பது இயல்பானதென்பர்
இளமையில் இறப்பு இயல்பாகுமா?

உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!

சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கிறது எங்கள் உள்ளங்களில்
அழியாத ஓவியமாக

நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கின்றது
உன் வரவை எதிர் பார்த்து

உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது…

மகளே என் உயிராய் உடலாய் உதிரமாய்
என்னுள்ளே நீ இருக்கும் போது பிரிவென்பதேது?

தகவல்: அம்மா, அப்பா, சகோதரிகள்

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply